மாஸ்க் எப்படி போட வேண்டும் என்று கூறிய மழலை👇😷😷😷😷😷😷😷😷
கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. அது என்னவென்றால் சமூக இடைவெளி விட்டு தனித்து இருக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும். இது போன்ற சில விசயங்களை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் பலரும் இதை கடைப்பிடிப்பது இல்லை. மேலும் ஊரடங்கு காலத்திலும் வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றி வருகிறனர். இவர்களின் அலட்சியத்தால் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த கொரோனா பற்றிய தகவல்கள் குழந்தைகளுக்கு கூட தெரிந்து உள்ளது. மாஸ்க் எப்படி அணிய வேண்டும் என்று இங்கு ஒரு குழந்தை கூறுகிறது இதனை பார்த்தாவது அனைத்து மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு தனித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

கருத்துரையிடுக